உயிர் மீனை விழுங்கிய 11 மாதக் குழந்தை... கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

மீனை விழுங்கிய குழந்தை
மீனை விழுங்கிய குழந்தை

கர்நாடகாவில், உயிருள்ள மீனை விழுங்கிவிட்டு உயிருக்குப் போராடிய 11 மாத குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றினர்.

மீனை விழுங்கிய குழந்தை
மீனை விழுங்கிய குழந்தை

கர்நாடக மாநிலம் தாவனகரே மாவட்டத்தின் ஹோனஹள்ளி தாலுக்காவில் உள்ளது கஞ்சேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யோகேஷ் - ரோஜா தம்பதி. இவர்களுக்கு பிரதீக் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று வீட்டின் சமையல் அறையில் ரோஜாவும் யோகேஷும் மீன் தொட்டியை கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த குழந்தை பிரதீக், ஒரு மீனை எடுத்து விழுங்கியுள்ளது. விழுங்கிய மீன் குழந்தையின் தொண்டையில் சிக்கியது. அதனால், மூச்சு விடமுடியாமல் போய் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைக் கண்ட பெற்றோர், தொண்டையில் சிக்கிய மீனை எடுக்க முயன்றனர். ஆனால், அவர்களால் மீனை எடுக்க முடியவில்லை. அதற்குள் குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீனால் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்திருக்கிறது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட மீன்
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட மீன்

விபரீதத்தை உணர்ந்துகொண்ட பெற்றோர் உடனடியாக சிவமோகா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அறுவை சிகிச்சை வசதி இல்லை எனக் கூறி, குழந்தையை மருத்துவர்கள் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையின் தொண்டையில் 11.3 செ.மீ நீளமுள்ள மீன் இருப்பதைக் கண்டறிந்தனர். தாமதிக்காமல் உடனே குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த மீனை அகற்றினர்.

சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை நலமுடன் உள்ளது . உயிருக்குப் போராடிய குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்குப் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in