குண்டர் சட்டத்தில் கைதாகிறாரா அமர் பிரசாத் ரெட்டி? - காவல்துறை விளக்கம்!

பாஜக அமர் பிரசாத் ரெட்டி
பாஜக அமர் பிரசாத் ரெட்டி

பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி பல வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டம் எதுவும் இல்லை என தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடியை காவல்துறையினர் அகற்றிய போது வன்முறையில் ஈடுபட்டதாக அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கிலும் கைது செய்யப்பட்டார். ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் இன்னொரு வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது, தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது அரசு அதிகாரிகளுடன் மோதியது உள்ளிட்ட பல வழக்குகளில் அடுத்தடுத்து அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

பாஜக அமர் பிரசாத் ரெட்டி
பாஜக அமர் பிரசாத் ரெட்டி

இந்த நிலையில் தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக அமர் பிரசாத் ரேட்டி மனைவியின் நிரோஷா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தாம்பரம் காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க தற்போது திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது

அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமக்கு ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தம்மை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர். அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்பதைத் தடுக்கவே தன்னை கைது செய்துள்ளனர். புழல் சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை. 500 கைதிகளுக்கு ஒரு சமையல் அறை என இருக்க வேண்டும். ஆனால் 2910 கைதிகளுக்கு ஒரு சமையல் அறைதான் உள்ளது என்றும் அந்த ஜாமீன் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார் அமர் பிரசாத் ரெட்டி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in