ஐ.ஆர்.சி.டி.சி. இணையசேவை முடங்கியது - ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு!

ஐ.ஆர்.சி.டி.சி. இணையசேவை முடங்கியது - ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள சேவை அரை மணி நேரமாக முடங்கியுள்ளது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் இ-டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்வதற்கு ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது தான் ஐஆர்சிடிசி சேவை. இதில் ஆன்லைன் வழியாக டிக்கெட் முன்பதிவை மக்கள் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், சற்று முன்னதாக ஐஆர்சிடிசி தரப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆர்சிடிசி இ- டிக்கெட் சேவை, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ள இணையதளத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்
ரயில்

மேலும் தொழில்நுட்ப குழு சேவையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, இ- டிக்கெட் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

இதேபோல் ஜூலை மாதம் ஐஆர்சிடிசி இ – டிக்கெட் சேவையானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிது நேரம் முடக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in