தன்னை விட வயதான நடிகையை திருமணம் செய்ய விரும்பிய மாதவன்!

நடிகர் மாதவன்
நடிகர் மாதவன்

பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்வது தான், தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக இருந்ததாக நடிகர் மாதவன் பேசியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவன், தற்போது பாலிவுட்டில் இயக்கம், நடிப்பு, வெப் சீரிஸில் என அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான ‘ராக்கெட்டரி’ திரைப்படம் தேசிய விருது வென்றது.

இந்நிலையில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ள வெப் சீரிஸ்' தி ரயில்வே மென்' வெளியாக உள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

ஜூஹி சாவ்லா
ஜூஹி சாவ்லா

அதில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் பிரபல நடிகை ஜூஹி சாவ்லாவை, தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட விஷயத்தை முதன்முறையாக கூறினார்.

இந்த தொடரில் நடித்துள்ள ஜூஹி சாவ்லா முன்பாக,"நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நான் ’கயாமத் சே கயாமத்’தைப் பார்த்தபோது 'ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்வது தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. இது குறித்து, ’நான் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்' என்று எனது அம்மாவிடமும் கூறியிருந்தேன்.

நடிகர் மாதவன்
நடிகர் மாதவன்

ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அப்போது எனது ஒரே நோக்கமாக இருந்தது. இந்த வெப் சீரிஸிலும் ஜூஹியுடன் என்னால் பணியாற்ற முடியவில்லை. அவரின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பிறகுதான் என்னுடைய காட்சி எடுக்கப்பட்டது. ஜூஹி சாவ்லா, என்னைவிட மூன்று வயது பெரியவர்” என்றார் மாதவன் சிரித்துக் கொண்டே.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in