மேயருக்கு எதிராக தர்ணா... 3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் - துரை முருகன் அதிரடி!

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

நெல்லை மேயருக்கு எதிராக மக்கள் குறைத் தீர்ப்பு முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 3 திமுக கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நெல்லை மேயர்
நெல்லை மேயர்

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் சரவணன் நிறைவேற்றி தருவதில்லை என ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அத்துடன், அடிக்கடி மாமன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதும், ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பதும் தொடர்கதையாகிறது. இதனால், மேயர் – கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்
தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்

நெல்லை மாநகராட்சியில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை
ஒழுங்கு நடவடிக்கை

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர் மற்றும் மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in