
'காசிந்த் 2023' என்ற 7வது ஆண்டு கூட்டு பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த 120 வீரர்கள் கஜகஸ்தான் சென்றுள்ளனர்.
இந்தியா, கஜகஸ்தான் இடையே ராணுவ கூட்டு பயிற்சி 2016ம் ஆண்டு ’பிரபால் டோஸ்டைக்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் இது ’காசிந்த்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு விமானப் பிரிவையும் சேர்த்து இருவழி பயிற்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 7வது ஆண்டு ‘காசிந்த் 2023’ கூட்டு பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த 120 வீரர்கள் கஜகஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த பயிற்சி கஜகஸ்தானின் ஓட்டார் நகரில் இன்று தொடங்கி வருகிற நவம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டு பயிற்சியின் போது இரு தரப்பினரும், போர் திறன்களில் பயிற்சி மேற்கொள்வதோடு, படைப்பிரிவுகளின் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!