சர்ச்சைக்கு ஆளான அயோத்தி - காசி - மதுரா தலங்கள்
சர்ச்சைக்கு ஆளான அயோத்தி - காசி - மதுரா தலங்கள்

‘காசி, மதுரா மசூதிகளை விட்டுத்தந்தால் மற்ற மசூதிகளை தொடமாட்டோம்’ ராமர் கோயில் நிர்வாகி புதிய சர்ச்சை

'வாராணசி(காசி) மற்றும் மதுராவில் உள்ள மசூதிகளை இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுத்தால், அதன் பிறகு வேறெந்த மசூதியையும் இந்துக்கள் உரிமை கோர மாட்டார்கள்' என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் தெரிவித்திருக்கிறார்.

”ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளால் இந்தியாவின் சுமார் 3,500 இந்துக் கோயில்கள் தகர்க்கப்பட்டு அங்கே மசூதிகள் கட்டமைக்கப்பட்டன. ஆனால் இந்துக்கள் தரப்பில் ராமர் கோயிலைத் தொடர்ந்து, காசி மற்றும் மதுராவில் இருக்கும் கோயில்களை மட்டுமே கோருகிறோம். அப்படி இணக்கமான முடிவுக்கு இஸ்லாமியர்கள் இறங்கி வந்தால், ஆக்கிரமிப்பில் எழுந்துள்ள இஸ்லாமியர்களின் இதர வழிபாட்டுத் தலங்களை விட்டுக்கொடுக்க இந்துக்கள் தயாராக உள்ளனர்” என்று கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் தெரிவித்திருக்கிறார்.

கோவிந்த் தேவ் கிரி மகாராஜ்
கோவிந்த் தேவ் கிரி மகாராஜ்

தனது 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரம் மாநிலம் புனே அருகில் பிப்.4 முதல் 11 வரை நடைபெறும் பல்வேறு மத வழிபாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் நேற்று வந்திருந்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வின் அங்கமாக, பத்திரிக்கையாளர்களிடம் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் பேசினார். அப்போது, ராமர் கோயிலைத் தொடர்ந்து வாராணசி காசி விஸ்வநாதர் மற்றும் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி என இந்து கோயில்கள், மசூதிகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக எழுந்திருக்கும் சர்ச்சை விவகாரம் தொடர்பாகவும் பேசினார்.

”நாங்கள் அனைத்து சமூக மக்களுடனும் இணைக்கமாகவும், அமைதியுடனும் வாழ விரும்புகிறோம். எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர வேண்டும். அதற்கு ராமர் கோயிலைத் தொடர்ந்து, மதுரா மற்றும் காசியிலும் எங்களது கோயில்கள் விடுவிக்கப்பட வேண்டும். இப்படி முக்கிய 3 கோயில்கள் முழுமையாக இந்துக்களுக்கு கிடைத்தால், அதன் பிறகு இதர கோயில் விவகாரங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை. இதற்கு அமைதியான முடிவு காண இஸ்லாமிய சமூகத்தினர் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த விவகாரங்களில் இஸ்லாமிய தரப்பில் ஒரு சிலர் மட்டுமே சர்ச்சையை உண்டாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். “பெரும்பான்மையான இஸ்லாமியர்கள், ஆக்கிரமிப்பில் எழுந்த மசூதிகள் குறித்தும், அங்கு இந்துக்களில் ஆலயங்கள் இருந்ததையும், அவர்களுக்கான வழிபாட்டு உரிமைகள் பறிபோனதையும் உணர்ந்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்புகளில் இருந்து இந்து சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் விடுபட வேண்டும் என்பதையும் அவர்கள் விரும்பி வருகின்றனர். ஆனால் இருதரப்பினரின் இணைக்கத்தையும், சமூகத்தில் அமைதியையும் விரும்பாத ஒரு சிலர் மற்றும் அமைப்புகள் மட்டுமே இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in