இமாச்சலப் பிரதேச அரசியலில் பரபரப்பு... 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் திடீர் ராஜினாமா!

இமாச்சல் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியாவை (வலமிருந்து 2வது) சந்தித்த சுயேச்சை எம்எல்ஏ-க்கள்
இமாச்சல் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியாவை (வலமிருந்து 2வது) சந்தித்த சுயேச்சை எம்எல்ஏ-க்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் இன்று ராஜினாமா செய்தனர்.

இமாச்சல் சுயேச்சை எம்எல்ஏ-க்கள்
இமாச்சல் சுயேச்சை எம்எல்ஏ-க்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் அங்கு அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 6 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக உருவாகியுள்ள காலி இடங்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள கடைசிக்கட்ட வாக்குப்பதிவில் இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்

இதற்கிடையே, பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வரும் 3 சுயேச்சை எம்எல்ஏ-க்களான ஆஷிஷ் சர்மா (ஹமீர்பூர் தொகுதி), ஹோஷியார் சிங் (தெஹ்ரா) மற்றும் கே.எல்.தாக்கூர் (நாலாகர்) ஆகியோர் இன்று சிம்லாவுக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூரை சந்தித்தனர். பின்னர் மூவரும் பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியாவிடம், தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து ஹோஷியார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் எங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளோம். பாஜகவில் சேர்ந்து தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளோம்" என்றார்.

6 தகுதி நீக்க எம்எல்ஏ-க்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் உள்ள 68 இடங்களிலிருந்து 59 ஆக சரிந்துள்ளது. தற்போது காங்கிரஸுக்கு 39 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25 உறுப்பினர்களும் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!

போதை ஊசியால் இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் தொடரும் சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in