இந்தியாவிலேயே அதிக வெப்ப அலை... ஈரோட்டுக்கு 3ம் இடம்; வெயிலில் தகிக்கும் தமிழகம்!

வெப்பம்
வெப்பம்

இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு 3வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ் (109.4 பாரன்ஹீட் வெப்பம்) வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது இயல்பு வெப்பநிலையில் இருந்து 5.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும்.

ஈரோடு
ஈரோடு

இதனால் இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் புவனேஸ்வரும், 2வது இடத்தில் கடப்பாவும் உள்ளன. புவனேஸ்வர் மற்றும் கடப்பாவில் நேற்று 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இந்த கோடை கால வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 3 முதல் 5 டிகிரி வரை வெப்ப அளவு அதிகரித்தது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் வெப்ப அலை
மேற்கு வங்கத்தில் வெப்ப அலை

இந்த சூழலில் தமிழ்நாடு, கர்நாடகா உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகாருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in