
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 5 மாவட்டங்களில் மிக கனமழைகான ’ஆரஞ்சு’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!
நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!
9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!