ஐஎன்எல்டி தலைவரை சுட்டுக் கொன்றவர்கள் சிக்கினார்கள்... வைரலாகும் சிசிடிவி வீடியோ!

ஐஎன்எல்டி தலைவரை சுட்டுக் கொன்றவர்கள் சிக்கினார்கள்... வைரலாகும் சிசிடிவி வீடியோ!

ஹரியானா மாநிலத்தில் ஐஎன்எல்டி மாநிலத் தலைவர் நஃபே சிங் ரதீ நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு சுட்டுக் கொலைச் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில கட்சியின் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகள், சுட்டுக் கொன்று விட்டு, காரில் தப்பி செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசாங்கத்தில், சட்டம் ஒழுங்கு குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்த ரதீயின் குடும்பத்தினர், தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், தங்களது உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்திருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஹரியாணாவில் காங்கிரஸ் - ஐஎன்எல்டி வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், ஐஎன்எல்டி மாநில தலைவர், சுட்டுக் கொலைச் செய்யப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் ஹரியாணாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட நஃபே சிங் ரதீ
சுட்டுக் கொல்லப்பட்ட நஃபே சிங் ரதீ

குற்றவாளிகளைப் பிடிக்க 2 டிஎஸ்பிகள் தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்த ஜாஜ்ஜார் டிஎஸ்பி ஷம்ஷேர் சிங், குற்றவாளிகள் காரில் தப்பி செல்லும் சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நஃபே சிங் ரதீயின் கொலை தொடர்பான சிசிடிவி காட்சியில், ஐ10 காரில் 5 பேர் தப்பி செல்வது பதிவாகி உள்ளது. கொலை நடந்த பகுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in