நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு... மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறை ரெய்டு!

அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை சோதனை

மேற்கு வங்கத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அம்மாநிலத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் மேற்கு வங்கத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சால்ட் லேக், ஐஏ பிளாக்கில், முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவர் ஹூக்ளி மாவட்டம், தனியாகாலியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

இதேபோல், ஹூக்ளி மாவட்டம், சின்சுராவில் ஒரு தொழிலதிபரின் வீடு, அலுவலகம், முர்ஷிதாபாத் மாவட்டம், பஹ்ராம்பூரில் மாநில அரசு ஊழியர் ஒருவருடன் தொடர்புடைய ஒரு நபரின் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் போலி வேலை அட்டைகள் வழங்கப்பட்டு, முறைகேடு நடந்துள்ளதாகவும் அமலாக்கத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in