களைகட்டும் மைசூரு தசரா; பராக்... பராக்... ரத்தின சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து தர்பார் செய்த மன்னர்!

ரத்தின சிம்மாசனத்தில் மன்னர்
ரத்தின சிம்மாசனத்தில் மன்னர்

மைசூரு தசராவை தொடங்கிய நிலையில் அங்குள்ள  ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து, மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், 'தனியார் தர்பார்' நடத்தினார். 

மைசூருவில் தசரா விழா  மன்னர்கள் காலத்தில் இருந்தே, வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசராவை ஒட்டி தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து, பொதுமக்கள் குறைகளை கேட்டு, மன்னர்கள் நிவர்த்தி செய்தனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து, கர்நாடகா தனி மாநிலமாக உருவெடுத்த பின்னர், சிம்மாசனம் அரசு சொத்தாக மாறியது. 

மைசூரு அரண்மனையின் கடைசி மன்னர் ஜெய சாமராஜா உடையார் காலத்தில், ரத்தின சிம்மாசனம் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிம்மாசனத்தை ஒன்பது பாகங்களாக பிரித்து, மைசூரு அரண்மனையின் ஒரு அறையில் வைத்து, அரண்மனை நிர்வாக அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தசரா நடக்கும் போது, சிம்மாசனத்தின் பாகங்கள் வெளியே எடுக்கப்பட்டு ஜோடிக்கப்படும்.

தங்க சிம்மாசனம்
தங்க சிம்மாசனம்

தசராவை ஒட்டி 10 நாட்கள், மன்னர் குடும்பத்தினர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார். இந்த ஆண்டுக்கான தசராவை முன்னிட்டு, கடந்த 9ம் தேதி மைசூரு அரண்மனையில் உள்ள, அம்பா விலாஸ் தர்பார் ஹாலில், சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. பின்னர் துணி வைத்து மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தசராவை ஒட்டி மன்னர் குடும்பத்தினர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், நேற்று காலை 11:30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை, அரை மணி நேரம் சிம்மாசனத்தில் அமர்ந்து,  தர்பார் நடத்தினார். முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு, மஞ்சள் கலந்த தண்ணீரில் குளித்தவர், அரண்மனையில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜை செய்தார். இதன் பின்னர் தனது குருவுக்கு பாதபூஜை செய்தார். 

பின்னர் தனது தாய் பிரமோதா தேவி உடையார் தலைமையில், கணபதி பூஜை; சண்டி யாகம், ஹோமம் நடத்தினார். அதன்பின்னர் அவருக்கு காப்பு கட்டப்பட்டது. காலை 6 மணியில் இருந்து 6:25 மணி வரை, சிம்மாசனத்திற்கு சிறப்பு பூஜை செய்தார். இதை தொடர்ந்து யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அவரது மனைவி திரிஷிகா குமாரிக்கு, கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

காலை 11:15 மணிக்கு சிம்மாசனம் இருக்கும், அம்பா விலாஸ் தர்பார் ஹாலுக்கு, ராஜ உடை அணிந்த யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரை, அரண்மனை சேவகர்கள் அழைத்து சென்றனர். அப்போது பகுபராக்... பகுபராக்... என்று முழக்கமிட்டனர். சிம்மாசனம் அருகில் சென்றதும், அதை தொட்டு வணங்கிவிட்டு அதில் ஏறி அமர்ந்து, தனியார் தர்பார் நடத்தினார். தசரா முடியும் வரை, தினமும் காலை, மாலை அரை மணி நேரம், தர்பார் நடத்துகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!

குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையின் 2வது தளபதி பலி!

புது கெட்டப்பில் விஜய்சேதுபதி... வைரலாகும் வீடியோ!

இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in