அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது

குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர். இவர்கள் தங்களது ஒரு வயது ஆண் குழந்தையுடன் வேலை நிமித்தமாக நேற்றிரவு ஒரிசாவில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் அறையிலேயே படுத்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் திடீரென இன்று அதிகாலை இரண்டு மணியளவில் எழுந்து பார்த்த போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

குழந்தையுடன் தாய்
குழந்தையுடன் தாய்

உடனே தம்பதியினர் ரயில் நிலையம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால் இது குறித்து சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஆணும், பெண்ணும் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறி செல்வது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை கண்டு பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபர்களை மதுரவாயல் பகுதியில் இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கைதான தம்பதி
கைதான தம்பதி

இதனையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். அதனை தொடர்ந்து குன்றத்தூர் பகுதியில் வைத்து போலீஸார் குழந்தையை பத்திரமாக மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பரப்பாஸ்மண்டல்-நமிதா தம்பதி என்பது தெரியவந்தது. அவர்களிடம் குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்டு கடத்தல்காரர்களை கைது செய்த காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in