வைரல் வீடியோ... புது கெட்டப்பில் விஜய்சேதுபதி!

புது கெட்டப்பில் விஜய் சேதுபதி
புது கெட்டப்பில் விஜய் சேதுபதி
Updated on
1 min read

நடிகர் விஜய் சேதுபதி புது கெட்டப்பில் தோற்றமளிக்கும் வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நடிகரும், இயக்குநருமான அமீரின் புதிய கஃபே திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த நடிகர் விஜய்சேதுபதியின் புதிய கெட்டப், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி 'ஜவான்' படத்திற்குப் பிறகு தற்போது கரீனா கபூருடன் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கி காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், அவரது புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணாடியும், ஒட்ட ட்ரிம் செய்யப்பட்ட மீசையுமாக 80களின் கதாநாயகர்கள் கெட்டப்பில் விஜய்சேதுபதியின் தோற்றம் கலக்கலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் மிஷ்கினுடன் இணையும் புதிய படத்திற்காகவே இந்த கெட்டப் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கெட்டப் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "படப்பிடிப்பு முடித்துவிட்டு இதே கெட்டப்பில் போகலாமா என இயக்குநரிடம் கேட்டேன். அவர் கெட்டப் வெளியாவது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்" எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in