மருத்துவர் சுகந்தன் மாரடைப்பால் மரணம்... 'ஏழைகளின் நாயகன்' என்று பெயர் பெற்றவர்

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் விருது பெறும் மருத்துவர் சுகந்தன்
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் விருது பெறும் மருத்துவர் சுகந்தன்

ஏழை எளிய மக்களுக்கு முன்வந்து உதவியதால் ஏழைகளின் நாயகன் என்று பெயர் பெற்றிருந்த மருத்துவர் சுகந்தன் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் , பாஜக மருத்துவர் பிரிவு தலைவராகவும் சுகந்தன் விளங்கினார். மருத்துவர் சுகந்தன் மறைவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் சுகந்தன்
மருத்துவர் சுகந்தன்

ஏழை எளிய மக்களிடம் மிகக் குறைவான கட்டணத்திலும், சில தருணங்களில் இலவசமாகவும் சிகிச்சை அளித்த வகையில் மருத்துவர் சுகந்தனை ’ஏழைகளின் நாயகன்’ என்று மக்கள் அழைத்தனர்.

குறிப்பாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் மீட்சிக்காகவும், சிகிச்சைக்காகவும், ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை சுகந்தன் மேற்கொண்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னர் தீபாவளியை முன்னிட்டு சுகந்தன் வழங்கிய மருத்துவக் குறிப்புகள் இப்போதும் இணையத்தில் வலம் வந்தபடி இருக்கின்றன.

இந்த சூழலில் இன்று காலை 7.15 மணியளவில் மாரடைப்பு காரணமாக மருத்துவர் சுகந்தன் மரணமடைந்ததாக பாஜக மருத்துவ அணியின் மாநிலத் தலைவர் டாக்டர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘டாக்டர் சுகந்தனின் அகால மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. நம்பிக்கையூட்டும் மருத்துவரான அவர், ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in