ஒரே நாளில் 4.71 லட்சம் பேர் பயணம்... உச்சம்தொட்ட உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!

உள்நாட்டு விமானப் பயணம்
உள்நாட்டு விமானப் பயணம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் 4,71,751 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.

நவீன யுகத்தில் விமானப் பயணம் இன்றியமையாத போக்குவரத்தாக உருவெடுத்துள்ளது. முன்பெல்லாம் விமானப் பயணம் என்பது வசதி மிக்கவர்களின் போக்குவரத்து சாதனமாக திகழ்ந்தது. ஆனால் இன்று, உயர் வகுப்பினர் மட்டுமின்றி தொழில் ரீதியாக பயணிப்போர், சுற்றுலா பயணிகள் என விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

விமானப் பயணம்
விமானப் பயணம்

இந்தியாவில் கொரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு தினசரி விமான பயணம் மேற்கொள்பவர்களின் சராசரி எண்ணிக்கை 3,98,579 ஆக இருந்தது. இந்நிலையில், கொள்ளை நோய் தொற்று காலத்துக்கு பின்பு மீண்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) இதுவரை இல்லாத அளவுக்கு உள் நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்து அன்றைய தினத்தில் மட்டும் 6,128 விமானங்களில் 4,71,751 பேர் பயணித்துள்ளனர். இது விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி அன்று, 5,899 விமானங்களில் 4,28,389 பேர் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது உறுதியான கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் குறைந்த விலையிலான விமானப் பயண கட்டணம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ளது. அதிகமான மக்கள் விமானப் பயணத்தை தேர்ந்தெடுப்பதால், இந்தத் துறை தொடர்ந்து வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in