விமானப் பயணத்தில் பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை... சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

விமானப் பயணம்
விமானப் பயணம்

விமானப் பயணங்களில் குழந்தைகள் தம் பெற்றோருக்கு அடுத்த இருக்கையைப் பெற வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்றைய தினம் (ஏப்ரல் 23) வெளியிட்ட ஓர் அறிவிப்பில், விமான நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விமான பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதி செய்யவும் அந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

விமானப் பயணத்தில் குழந்தைகள்
விமானப் பயணத்தில் குழந்தைகள்

"12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரே PNR-ல் பயணம் செய்யும் வகையில், குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவருடன் இருக்கை ஒதுக்கப்படுவதை விமான நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும்” என்று அந்த உத்தரவு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாது போனது குறித்து பல பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை இன்று வழங்கி உள்ளது. இதற்காக புதிய வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கும் டிஜிசிஏவின் அறிக்கை, ’சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) 2024-ம் ஆண்டின் விமானப் போக்குவரத்து சுற்றறிக்கை’யை திருத்தியுள்ளது.

இந்த வரிசையில் ’திட்டமிடப்பட்ட புறப்படலுக்கு முன் ஆன்லைன் வாயிலாக எந்த இருக்கையையும் தேர்ந்தெடுக்காத பயணிகளுக்கு தானியங்கித் தேர்வாக இருக்கை ஒதுக்குவதற்கான ஏற்பாடும்’ செய்யப்பட்டுள்ளது.

விமானம்
விமானம்

இது தவிர்த்து விமான பயணங்களில் வழங்கப்பட வேண்டிய மதுபானங்கள் குறித்து, டிஜிசிஏ உச்ச நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில், ’சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகளின் பிரிவு 4.3, ஒவ்வொரு விமான நிறுவனத்தின் விருப்புரிமையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, போதையில் இருக்கும் பயணிகளால் எழும் தொல்லைகள் மற்றும் இதர அபாயங்களை தவிர்க்கவும், பயணிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் விமான நிறுவனங்கள் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தது.

இந்த போதை பயணிகளே நடுவானில் சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, விமான பணிப்பெண்களுக்கு தொந்தரவு அளிப்பது, சக பயணிகளுக்கு அச்சுறுத்தல் தருவது உள்ளிட்டவற்றுக்கு காரணமாகிறார்கள். இத்தகைய போக்குக்கு முடிவு கட்டும் வகையில் புதிய மாற்றங்களை விமான சேவை நிறுவனங்கள் கைக்கொள்ள உகந்த பரிந்துரைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in