அயோத்தி செல்லும் பக்தர்களின் செலவுகளை மத்திய அரசே ஏற்கும்... அண்ணாமலை வாழ்த்து!

ராமர் கோயில்
ராமர் கோயில்

தமிழகத்தில் இருந்து அயோத்தி செல்லும் பயணிகளின் செலவை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் சிறப்பு ரயில்
ராமர் கோயில் சிறப்பு ரயில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில், குழந்தை ராமர் விக்ரகத்தின் பிராணப்பிரதிஷ்டை கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த பிராணப்பிரதிஷ்டையில் கலந்துகொண்டார். இதையடுத்து, நாள் ஒன்றிற்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் கடந்த 16 நாட்களில் மட்டும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அயோத்திக்குப் பக்தர்கள் செல்ல ஏதுவாக இந்தியா முழுவதும் இருந்து விமானங்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகத் தமிழகத்தின் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ராமர் கோயில் சிறப்பு ரயில்
ராமர் கோயில் சிறப்பு ரயில்

இந்த ரயில்களில் பயணம் செய்ய சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த பயணிகள் அனைவரது பயண செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதனைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன.

ராமர் கோயில் சிறப்பு ரயில்
ராமர் கோயில் சிறப்பு ரயில்

தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாகப் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. அயோத்தி செல்வதற்கான முதல் சிறப்பு ரயில், இன்று மாலை, கோவையிலிருந்து புறப்படவிருக்கிறது.

தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in