உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம்: லிவ்-இன் ரிலேஷனை பதியாவிட்டால் 6 மாதம் சிறை!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்

உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவையில் பொது சிவில் சட்டம் இன்று தாக்கலானது. இதன்படி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்-பில் இருப்பவர்கள் தங்களை அரசிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவையில் பொது சிவில் (யுசிசி) சட்ட மசோதாவை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தாக்கல் செய்தார்.

அப்போது பேரவையில் உறுப்பினர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'வந்தே மாதரம்’ என கோஷங்களை எழுப்பினர். இந்த மசோதா மீது விவாதம் நடத்தி பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்தால், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்-பில் இருக்கும் அல்லது இணைய திட்டமிடும் தனி நபர்கள், தங்களை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக இருப்பவர்கள் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் அல்லது இரண்டையும் சேர்த்து எதிர்கொள்ள நேரிடும்.

இதேபோல், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தகவல்களை மறைத்தல் அல்லது தவறான தகவல்களை வழங்கினால், அவர்கள் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் அல்லது இரண்டையும் சேர்த்து எதிர்கொள்ள யுசிசி வழி வகை செய்கிறது. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோரின் ஒப்புதலை பெற வேண்டும்.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தகவல்கள் உள்ளூர் காவல் நிலையத்தின் பொறுப்பாளருக்கு அனுப்பப்படும். அறிக்கையில் வழங்கப்பட்ட விவரங்கள் தவறானவை என தெரியவந்தால், காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்படும்.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் கைவிடப்பட்ட ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகலாம். மேலும் பராமரிப்பு தொகையை கோர உரிமை உண்டு. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் பிறக்கும் குழந்தை, யுசிசி விதிகளின் கீழ் தம்பதியின் சட்டப்பூர்வ குழந்தையாக அறிவிக்கப்படும்.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, பார்ட்னர்கள் அல்லது அவர்களில் ஒருவர் தாங்கள் வசிக்கும் அதிகார வரம்புக்குள் உள்ள பதிவாளரிடம் உறவுமுறை ரத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டப் பேரவையில் புஷ்கர் சிங் தாமி
சட்டப் பேரவையில் புஷ்கர் சிங் தாமி

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவை முடிவுக்குக் கொண்டுவர விரும்புபவர், தங்கள் இணையரிடம் உறவு முறிவு அறிக்கையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் பதிவு செய்ய இயலாமல் போகும் காரணிகளும் யுசிசி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுசிசி மதங்களை பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் வாரிசுரிமை சட்டங்களை முன்மொழியும் நோக்கத்தை கொண்டுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்ட மசோதா உத்தராகண்ட் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in