திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த புது தம்பதி!

ஜம்மு - காஷ்மீர், கதுவாவில் திருமண கோலத்தில் வாக்களித்த அசிம் மங்கோத்ரா - வைஷாலி தம்பதி
ஜம்மு - காஷ்மீர், கதுவாவில் திருமண கோலத்தில் வாக்களித்த அசிம் மங்கோத்ரா - வைஷாலி தம்பதி

ஜம்மு - காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று திருமணம் முடிந்த கையோடு புது தம்பதியினர் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவா நகரின் 9வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திருமண உடையில் ஒரு ஜோடி வாக்களிக்க வந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அசிம் மங்கோத்ரா - வைஷாலி என்ற ஜோடிக்கு இன்று காலை தான் திருமணம் நடந்தது. சிலர் நேரமிருந்தாலும் வாக்களிக்க செல்லாமல் அசிரத்தையுடன் இருக்கும் நிலையில், திருமணம் முடிந்த கையோடு, கொண்டாட்டங்களுக்கு இடையே ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வந்த இந்த புதுமண ஜோடியை அங்கிருந்தவர்கள் பாராட்டி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மேலும், இவர்கள் வாக்களிக்க வந்தது, நாட்டின் ஜனநாயகம் மீது உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறினர். மேலும் சிலர், புதுமண தம்பதிக்கு வரிசையில் வழிவிட்டு முன்கூட்டியே சென்று வாக்களிக்க உதவி புரிந்தனர். வாக்களித்த பிறகு அசீமும், வைஷாலியும் தங்கள் விரல்களில் வைக்கப்பட்ட அழியாத மை அடையாளத்தை பெருமையுடன் காண்பித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, எங்கள் உரிமையை இழக்க விரும்பாமல் வாக்களிக்க வந்தோம். இந்த நாள் எங்களுக்கு நல்ல நாளாக அமைந்துள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் திருமணத்தில் இணைந்துள்ளோம். மேலும் ஜனநாயகம் மீதான எங்கள் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறோம்” என்றனர். இதேபோல் மத்திய பிரதேச மாநிலம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள், வாக்களித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in