ஒடிசாவில் ஓடும் பேருந்தில் இளசுகள் அத்துமீறல்... நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்கள் கோரிக்கை

ஒடிசா பேருந்தில் அத்துமீறிய சோடி
ஒடிசா பேருந்தில் அத்துமீறிய சோடி

ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலின் மத்தியில் இளம் ஜோடி அத்துமீறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பொதுஇடத்தில் வரம்பு மீறிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சம்பவம் என்ற அறிமுகத்துடன் வீடியோ ஒன்று நேற்று முதல் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓடும் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் இளம் ஜோடி ஒன்று மிகவும் நெருக்கமான சேட்டைகளில் ஈடுபட்டு வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இளம்ஜோடியின் நெருக்கத்தை பயணிகளில் ஒருவரே தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். தங்களது நெருக்கத்தை கொண்டாடும் வகையில் சிரித்துப் பேசியபடியும், மகிழ்வாகவும் அந்த ஜோடி காட்சியளிக்கின்றனர். அவர்களது மகிழ்ச்சி தனி இடத்தில் அரங்கேறி இருந்தால் எவரும் கேள்வி எழுப்பி இருக்க மாட்டார்கள். ஓடும் பேருந்தில், பட்டப்பகலில், வயது வித்தியாசமின்றி பயணிகள் உடனிருக்கையில், அவர்கள் இருவரும் அத்துமீறியது சலசலப்பை உருவாக்கி உள்ளது.

இம்மாதிரியான பொதுஇடத்து சேட்டைகள் டெல்லியில் அதிகம் என்பதால், இந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டதாக முதல் சுற்று தகவல் வலம் வந்தது. ஆனால் சில ஆன்லைன் ஆய்வாளர்கள் அந்த வீடியோவை கூராய்வு செய்து, அது ஒடிசாவில் நிகழ்ந்த சம்பவம் என தெளிவுபடுத்தி உள்ளனர். பேருந்து நடத்துனர் ஆடையில் இருந்த லோகோ அடையாளத்தை முன்னிறுத்தி பேருந்து நிறுவனம் வரை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும், சமூக ஊடக நியாயவான்கள் கொதித்து எழுந்தனர். வைரல் வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக, “இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றின் வரிசையில் பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளவும் இங்கே சுதந்திரம் நிலவுகிறதா?" என்று அவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துமீறல் ஜோடி
அத்துமீறல் ஜோடி

அந்த கேள்விக்கு நியாயம் சேர்க்கும் வகையில், பேருந்து, ரயில் என அண்மைக்காலமாக பொதுப்பயணங்களில் பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அதிலும் பெருநகரங்களில் அவை வரம்பு கடந்து வருகின்றன. இந்த வகையில் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணித்த ஒரு ஜோடி, அந்தரங்கமான செயலில் ஈடுபட்டது கேமராவில் சிக்கியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு உடனடியாக புகாரும் தாக்கீதானது.

தற்போதைய ஒடிசா சம்பவத்தில், இளம் சோடிகளுக்கு எச்சரிக்கையேனும் விடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. அம்மாதிரியான நடவடிக்கைகள் வரும்காலத்தில் பொதுஇடங்களில் கண்ணியம் காப்பதற்கு உதவியாக அமையும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in