தேர்தல் களேபரம்... கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்குள்ளேயே குஸ்தி!

துமகூருவில் பாஜக - ஜேடிஎஸ் தொண்டர்கள் மோதல்
துமகூருவில் பாஜக - ஜேடிஎஸ் தொண்டர்கள் மோதல்

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் நடந்த கூட்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தொண்டர்களும் பாஜக தொண்டர்களும் மோதிக்கொண்டனர்.

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், துமகூரு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சோமன்னாவுக்காக பிரச்சாரம் செய்ய, துருவேக்கேரில் இரு கட்சிகளின் கூட்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், "கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எனது தோல்விக்கு பாஜக தலைவர் கொண்டஜி விஸ்வநாத் தான் காரணம்" என ஜேடிஎஸ் எம்எல்ஏ-வான எம்.டி.கிருஷ்ணப்பா குற்றம் சாட்டினார். இதனால் மேடையில் இருந்த இரு கட்சியின் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர்.

பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி
பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி

விஸ்வநாத், முன்னர் ஜேடிஎஸ் கட்சியில் இருந்தவர். பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார். நேற்று கூட்டுக் கூட்டத்தின்போது மேடையில் பேசுவதற்கு விஸ்வநாத் செல்ல முயன்றபோது, சோமண்ணா அவரைத் தடுத்து, மேற்கண்டவாறு கூறினார். இதையடுத்தே இரு கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது.

முன்னதாக பாஜக எம்பி-யான தேஜஸ்வி சூர்யா கூறுகையில், "கர்நாடகாவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என தெரிவித்தார். இந்நிலையில் பாஜக – ஜேடிஎஸ் தொண்டர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in