குறைந்துபோன மிளகாய் விலை; கொதித்தெழுந்த விவசாயிகள்... வாகனங்களுக்கு தீவைத்து வன்முறை!

தீயணைப்பு வாகனங்களுக்கு தீ வைப்பு
தீயணைப்பு வாகனங்களுக்கு தீ வைப்பு

மிளகாய் விலை பெரிய அளவில் குறைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்ட விவசாயிகள் சங்க சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

வாகனங்களுக்கு தீ வைப்பு
வாகனங்களுக்கு தீ வைப்பு

தெலங்கானா, கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் அதிகளவில் மிளகாய் பயிரை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விலையும் மிளகாய்களுக்கு நாடு முழுவதும் நல்ல மவுசு உள்ளது. இதனால் இரு மாநில விவசாயிகளும் அதிகளவில் மிளகாய் பயிர்களை பயிரிட்டனர். விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் மிளகாய்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் இயங்கி வரும் மிளகாய் சந்தையில் கடந்த வாரம் 100 கிலோ மிளகாய் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது. ஆனால் நேற்று 100 கிலோ மிளகாய் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.

கடுமையாக மிளகாய் விலை குறைந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சந்தை பகுதியில் உள்ள விவசாய சேவா கூட்டுறவு மையத்துக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் மையத்துக்குள் இருந்தவர்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பின்னர் வெளியே வந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க அலுவலகத்துக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கார்களுக்கு தீவைத்து எரித்தனர். மேலும் 10 இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்ததால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்களையும் விவசாயிகள் தாக்கினர். இதனால் மிளகாய் சந்தை பகுதி போர்க்களமாக மாறியது. பின்னர் நிகழ்விடத்துக்கு விரைந்த போலீசாரையும் விவசாயிகள் கற்களை வீசி தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவியது. அங்கு கூடிய போராட்டகாரரர்களை விட குறைந்த அளவே போலீசார் இருந்ததால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவலர்கள் சிரமமடைந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

பாஜக அமைச்சரவை திடீர் ராஜினாமா... ஹரியாணாவில் பரபரப்பு!

ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!

சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்... மோடி காமராஜர் போல் ஆட்சி நடத்துவதாக புகழாரம்!

1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in