இது புதுசா இருக்கே... மணமகள் கிடைக்காத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு!

மணமகள் வேண்டும் என பேனர் அடித்த ஆட்டோ ஓட்டுநர் தீபேந்திர ரத்தோர்
மணமகள் வேண்டும் என பேனர் அடித்த ஆட்டோ ஓட்டுநர் தீபேந்திர ரத்தோர்
Updated on
2 min read

மணமகள் கிடைக்காத விரக்தியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் 'மனைவி வேண்டும்' என விளம்பரம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் சமீப காலமாக 90ஸ் கிட்ஸ்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் இந்தியாவில் பெருகத்துவங்கிய காலத்தில் பிறந்தவர்கள் என்பதால், இன்றைய பெருவாரியான தொழில்நுட்பத்தை தவிர்க்கவும் முடியாமல் பழைய காலம் மாறிவிட்டதை ஏறகவும் முடியாமல் இவர்கள் திணறி வருகின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மணமகள் கிடைக்காததால் ஏற்படும் சிக்கல்கள். 2கே கிட்ஸ்கள் திருமணம் செய்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் போது, அதில் பெரும்பாலான கமெண்டுகளில் 90ஸ் கிட்ஸ்களின் ஒப்பீடாகவே இருக்கும்.

ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள மணமகள் தேவை பேனர்
ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள மணமகள் தேவை பேனர்

இதனால் திருமணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு விதமான பதிவுகளை பதிவிட்டும், செயல்களில் ஈடுபட்டும் கவனத்தை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இ-ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தாமோ பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான தீபேந்திர ரத்தோர். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே திருமணத்திற்காக இவரது பெற்றோர் மணமகள் தேடி வந்துள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் மணமகள் கிடைக்காமல் திருமணம் தள்ளிப் போய் வந்துள்ளது.

தீபேந்திர ரத்தோரின் சுய விவரங்கள் அடங்கிய பேனர்
தீபேந்திர ரத்தோரின் சுய விவரங்கள் அடங்கிய பேனர்

பெற்றோர் கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்ப்பதை நிறுத்திவிட்டு, வழிபாடுகளில் மூழ்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரத்தோர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். அப்போது மணமகள் தேட புதுமையான அணுகுமுறை ஒன்றை அவர் கண்டறிந்தார். அதன்படி தன்னுடைய சொந்த விவரங்களான பிறந்த தேதி, தனது உயரம், பிறந்த நேரம், ரத்தப்பிரிவு, கல்வித் தகுதி, அவரது குலம், கோத்திரம் உட்பட அனைத்தையும் குறிப்பிட்டு இந்தியில் பேனர் ஒன்றை அச்சடித்தார். அந்த பேனரை தனது ஆட்டோ ரிக்‌ஷாவில் அவர் பொருத்தியுள்ளார்.

தற்போது செல்லும் இடங்களில் எல்லாம் இவரது இந்த பேனர் கவனத்தை ஈர்த்து வருகிறது. தனக்கு சாதி, மத வேறுபாடுகள் கிடையாது எனவும், எந்த பெண்ணும் தன்னை திருமணத் திட்டத்துடன் அணுகலாம் எனவும் ரத்தோர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனக்கு கிடைக்கும் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து பார்த்துக் கொள்வேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தற்போது இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!

அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in