அடுத்து அசாமிலும் வருகிறது பொது சிவில் சட்டம்... முதல்வர் நடவடிக்கை!

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
Updated on
2 min read

உத்தராகண்ட்டை தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

உத்தராகண்ட் பேரவையில் பொது சிவில் சட்டம் தாக்கல்
உத்தராகண்ட் பேரவையில் பொது சிவில் சட்டம் தாக்கல்

பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பொது சிவில் சட்டம் (யுசிசி) நிறைவேற்றப்பட்டது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக உள்ளன. இதற்குப் பதிலாக, அனைத்து மதத்தினரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தின் படி, லிவ்-இன் ரிலேஷனில் இருப்பவர்கள் அதை அரசிடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்றும், அதை மீறினால் 6 மாதம் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

இதேபோல், அத்தை, மாமா மகன், மகள் உறவு முறை உட்பட பல்வேறு உறவுமுறைகளில் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம், விவாகரத்து தொடர்பாக பல்வேறு விதிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் பழங்குடியினருக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து உத்தராகண்ட் அரசு விலக்கு அளித்துள்ளது.

இந்நிலையில் உத்தராகண்ட்டை தொடர்ந்து அசாமிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வர அம்மாநில பாஜக அரசு ஆலோசித்து வருகிறது. அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அம்மாநில பட்ஜெட் மற்றும் பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

சமீபத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “உத்தராகண்டிற்குப் பிறகு அசாம் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரும். நாங்கள் ஏற்கெனவே குழந்தைத் திருமணம், பலதார மணத்தை எதிர்த்துப் போராடி வருகிறோம். எனவே அசாம் பொது சிவில் சட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கும். இந்த மசோதாவில் அசாமை மையமாகக் கொண்ட புதுமைகள் இருக்கும். பழங்குடியினருக்கு இதிலிருந்து விலக்கு அளிப்போம்” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in