காணும் பொங்கல் கலெக்‌ஷன்... கட்சியினருக்கு மதுவும் உயிர்க் கோழியும் பரிசளித்த எம்எல்ஏ!

மதுவும், கோழியும் வழங்கிய ஆந்திர எம்எல்ஏ
மதுவும், கோழியும் வழங்கிய ஆந்திர எம்எல்ஏ
Updated on
2 min read

காணும் பொங்கலை முன்னிட்டு தன்னைக் காண வந்த கட்சி தொண்டர்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மதுவுடன், உயிர்க் கோழியையும் பரிசளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாசுப்பள்ளி கணேஷ் குமார்
வாசுப்பள்ளி கணேஷ் குமார்

ஆந்திரம் மாநிலம் விசாகபட்டினத்தின் தெற்கு தொகுதியில் எம்எல்ஏ-வாக இருப்பவர் வாசுப்பள்ளி கணேஷ் குமார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இவர். தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டது போல், ஆந்திராவில் சங்கராந்தி விழா கடந்த 4 நாட்களாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஒய்எஸ்ஆர் கட்சித்தொண்டர்கள், எம்எல்ஏ-வான வாசுப்பள்ளி கணேஷ் குமாரை சந்திக்க கட்சி அலுவலகம் வந்தனர்.

அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற எம்எல்ஏ, அனைவருக்கும் காணும் பொங்கல் கலெக்‌ஷனாக ஒரு ஃபுல் பாட்டில் மதுவும், 2 கிலோ உயிர் கோழியையும் பரிசாக அளித்து அனுப்பி வைத்தார். இந்த இன்ப அதிர்ச்சியால் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த தொண்டர்கள் அனைவரும் ஒரு கையில் கோழியும் இன்னொரு கையில் சரக்குமாய் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர். இப்படி 400-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களுக்கு கணேஷ் குமார் பொங்கல் பரிசு வழங்கி ’மயக்கி’ இருக்கிறார்!

மதுவும், கோழியும் வழங்கிய ஆந்திர எம்.எல்.ஏ
மதுவும், கோழியும் வழங்கிய ஆந்திர எம்.எல்.ஏ

ஆந்திராவில் கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருநபர் 3 பாட்டிலுக்கு மேல் மதுபானம் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற விதி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, எம்.எல்.ஏ எப்படி 400 மதுபாட்டில்களை வைத்திருந்தார் எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, கலால் மற்றும் ஆயத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் கூறப்படுகிறது. கடந்த ஆயுத பூஜை சமயம், கணேஷ் குமார் 300 பேருக்குத் திரைப்பட டிக்கெட் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

போர் மூளும் அபாயம்... ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!

1265 கிலோ எடையில் பிரமாண்ட லட்டு... அயோத்தி ராமர் கோயிலுக்கு சாலை வழியாக அனுப்பப்படுகிறது!

அயோத்தி ராமரை பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்னேஷ்சிவனுக்கு டாட்டா பை... பை... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in