அமித் ஷா என்னை பயமுறுத்த முயற்சிக்கிறார்... ரேவந்த் ரெட்டி ஆவேசம்!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

அமித் ஷா குறித்த போலி வீடியோவை பகிர்ந்ததற்காக டெல்லி காவல்துறையால் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ‘அமித் பாய்’ (அமித் ஷா) தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த போலியான வீடியோவை பகிர்ந்ததற்காக தெலங்கானா முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ரேவந்த் ரெட்டி, மே 1 ஆம் தேதி ஆஜராகுமாறு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியது. இருப்பினும் அவர் சம்மனைத் தவிர்த்துவிட்டார்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

பயமுறுத்த முயற்சி

இதுகுறித்து பேசியுள்ள ரேவந்த் ரெட்டி, “அமித் பாய் என்னை பயமுறுத்த முயற்சிக்கிறார். அதற்காக அவர் தனது அமைச்சகத்தைப் பயன்படுத்துகிறார். ஒரு அரசியல் கட்சி வேறொரு கட்சி அல்லது தலைவருக்கு எதிராக ஒரு வீடியோவை வெளியிட்டால், சம்பந்தப்பட்ட கட்சி புகார் அளிக்க வேண்டும். ஆனால் இங்கு, மத்திய உள்துறை அமைச்சகம் புகார் அளித்துள்ளது.

எனவே பாஜக, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை பயன்படுத்துவது போல டெல்லி காவல்துறையை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், நீதிமன்றங்கள் உள்ளன. எனது ட்விட்டர் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளேன்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

சமூக ஊடகங்களின் யுகத்தில், வீடியோக்கள் "தன்னிச்சையாக" வெளியிடப்படுகின்றன. ஒரு முதல்வர் மீது குற்றம் சாட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினால், பாஜக கையில் ஏஜென்சிகள் உள்ளன என்று அர்த்தம்" என்று ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in