அதிர்ச்சி... நாகாலாந்தின் 6 மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகாத கொடுமை!

தேர்தல் புறக்கணிப்பு
தேர்தல் புறக்கணிப்பு

நாகாலாந்தில் தனி மாநிலம் கோரி, 6 மாவட்டங்களில் இன்று மதியம் வரை ஒரு நபர் கூட வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதிதான் உள்ளது. இம்மாநிலம் இன்றைய முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவை எதிர்கொள்கிறது. நாகாலாந்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏழு நாகா பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இஎன்பிஓ அமைப்பு, தனி தன்னாட்சி நிர்வாகம் அல்லது அங்குள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இஎன்பிஓ அமைப்பு தனி மாநில கோரிக்கை
இஎன்பிஓ அமைப்பு தனி மாநில கோரிக்கை

தங்கள் கோரிக்கை நிறைவேறாதவரை தேர்தலில் பங்கேற்க போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் இன்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 16 மாவட்டங்களை கொண்ட நாகாலாந்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி தான் உள்ளது. இதில் இஎன்பிஓ அமைப்பு 6 மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதனால் அங்கு இன்று மதியம் வரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்நிலையில், தேர்தல் நடவடிக்கையை சீர்குலைத்ததற்காக நாகாலாந்து தலைமை தேர்தல் அதிகாரி, இஎன்பிஓ அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “ கிழக்கு நாகாலாந்து பகுதிகளில் வசிப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் சுதந்திரத்தில் தலையிட்டுள்ளீர்கள்.

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு
கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு

எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 சி உட்பிரிவின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. நாகாலாந்தில் கடந்த 2018ல் நடந்த இடைத்தேர்தலில் இருந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) டோகேஹோ யெப்தோமி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக உள்ளார். என்டிபிபி, தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in