ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்... 25 ஊழியர்களின் பணிநீக்கமும் ரத்து!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் பணியாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை பரிசீலிக்க விமான நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், 25 கேபின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணிநீக்க கடிதங்களை திரும்பப் பெறவும் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென மருத்துவ விடுப்பு எடுத்து பணிக்குச் செல்லாததால் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்க நேர்ந்தது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

இதனை தொடர்ந்து சுமார் 25 மூத்த கேபின் குழு உறுப்பினர்கள் விமான நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். வியாழன் அன்று மாலை 4 மணிக்குள் மற்ற கேபின் குழு உறுப்பினர்கள் பணிக்கு வரவேண்டும் விமான நிறுவனம் காலக்கெடு விதித்தது.

இந்த சூழலில் இன்று டெல்லியில் உள்ள மத்திய தொழிலாளர் ஆணையர் தலைமை அலுவலகத்தில் கேபின் குழு பிரதிநிதிகள் மற்றும் விமான நிறுவனப் பிரதிநிதிகளுக்கு இடையே சமரசக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் மற்றும் பணி நீக்கம் ஆகியவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்ட காரணத்தால், இந்த நிறுவனத்தின் விமானசேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in