இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

இந்திய தலைமை  தேர்தல் ஆணையம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

இந்தியாவில் வரும் மக்களவைத் தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல்
தேர்தல்

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி, தொகுதி பேச்சுவார்த்தை , தேர்தல் அறிக்கையென கட்சிகள் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளன. ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கானப் பணியில் தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி, மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கும் அழியாத மை தயாரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில், நாடு முழுவதும் 96.88 பேர் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலைவிட வரும் தேர்தலில் 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாதான் உலகின் அதிக வாக்காளர்களை கொண்ட நாடு என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுபோன்று, மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள் 2.63 கோடி பேர் உள்ளனர். புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள், 17 வயது நிறைவடைந்த உடனே பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 10.64 லட்சம் பேர் ஆவர். 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 1.84 கோடி பேர் உள்ளனர். 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 19.74 கோடி பேர் உள்ளனர்.

மொத்தமாக ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்த வாக்காளர்கள் 67.82 லட்சம் பேரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக இடம்மாறி சென்ற 75.11 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும், இரு இடங்களில் பெயர் பதிவான 22.05 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in