5 ரூபாய் குர்குரேவை கணவர் வாங்கித் தராததால் விவகாரத்து கேட்ட பெண்... போலீஸார் அதிர்ச்சி!

குர்குரே
குர்குரே

கணவன் குர்குரே பாக்கெட் வாங்கித்தர மறுத்ததால், தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்ட அவரது மனைவி, விவாகரத்து கோரி காவல் துறையை அணுகியுள்ள சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நல்லபடியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் 5 ரூபாய் குர்குரே பாக்கெட் எதிரியாக நுழைந்துள்ளது.

குர்குரே
குர்குரே

நொறுக்குத் தீனி மீது ஆர்வம் கொண்ட இளம்பெண், தனது கணவனிடம் குர்குரே பாக்கெட் வாங்கித் தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். இது கணவன், மனைவிக்குள் பெரும் பிரச்சினையாக வெடித்தது.

இந்த நிலையில், குர்குரே பாக்கெட் கணவன் வாங்கித் தராததால், கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற இளம்பெண், தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று ஷாகஞ்ச் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இப்புகார் தொடர்பாக, அந்த இளம்பெண்ணின் கணவரை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, முன்பெல்லாம் தான் கேட்ட போதெல்லாம் குர்குரே பாக்கெட் வாங்கித் தந்த கணவர், பிறகு அதை வாங்கித் தரவில்லை என்றும், அதை வாங்கித் தருமாறு கேட்ட தன்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும் அந்த இளம்பெண் புகாரில் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது ஆக்ராவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதே போல ஆக்ராவில் கடந்த பிப்ரவரி மாதமும் ஒரு புகார் மக்களின் கவனத்தை ஈர்த்தது. தனது மனைவியின் அரசியல் நடவடிக்கை எரிச்சலூட்டுவதாகவும், இதனால் அவருடன் வாழ முடியாது என்றும் சிக்கந்த்ராவைச் சேர்ந்த கணவர், காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அரசியல் களத்தை விட்டு தனது மனைவி விலகாவிட்டால், அவருடன் வாழமாட்டேன் என்று அவரது கணவர் உறுதிபட கூறினார். அரசியல் காரணமாக தனது மனைவி வேண்டாம் என்றும் ஒரு கணவரும், தனது கணவர் குர்குரே வாங்கித் தரவில்லை என்று ஒரு மனைவியும் விவாகரத்து கேட்ட சம்பவம் ஆக்ரா மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in