முதியவருக்கு மனிதாபிமானம் தந்த பரிசு... இந்தியாவில் வேகமாக பரவும் வீடியோ!

ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த இளம்பெண்
ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த இளம்பெண்

இளம் வயதில் தன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு இளம்பெண் ஒருவர் தண்ணீர் பாட்டிலை பரிசாக வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில சமயங்களில் நாம் செய்யும் சிறு உதவியோ அல்லது செயலோ ஒருவரின் முகத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். இதற்கு சரியான உதாரணம், ஆட்டோ ஓட்டுநருக்கு இளம்பெண் ஒருவர் தண்ணீர் பாட்டிலை பரிசாக கொடுத்த சம்பவம் தான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த சர்ப்ரைஸ் பரிசை பார்த்து அந்த ஆட்டோ ஓட்டுநர் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

இந்த உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், மனிதர்களிடையே உதவும் மனப்பான்மை இல்லையென்றால், எல்லாம் வீண் தான். இரக்கமும் மனிதாபிமானமும் தான், மனித உறவுகளை பிணைக்கிறது. அதனால் தான், மனித நேயத்துடன் உதவ விரும்பும் மற்றும் தங்களால் இயன்றதைச் செய்ய விரும்பும் பலரின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

அதேபோல், நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டும் ஆட்டோ ஓட்டுநருக்கு, இளம்பெண் ஒருவர் தண்ணீர் பாட்டிலை பரிசாக அளித்துள்ள வீடியோ @cheerfullbong என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

இளம் வயதில் தன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு, இளம்பெண் ஒருவர் தண்ணீர் பாட்டிலை பரிசளிக்கிறார. நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் ஆட்டோ ஓட்டுனர், குடிநீருக்கு சுத்தம் இல்லாத பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துவதைக் கவனித்த இளம்பெண், அவருக்கு தரமான தண்ணீர் பாட்டிலை கொடுக்க திட்டமிட்டு, தொழிலாளர் தின பரிசாக வழங்கியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 1.1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் இளம் பெண்ணின் செயலை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர், ஆட்டோ ஓட்டுநரின் முகத்தில் புன்னகையை வரவழைத்ததற்கு நன்றி என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in