ஷாக்... பெற்ற குழந்தையை இப்படி யாராவது செய்வாங்களா?: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

சாகசத்தில் ஈடுபட்ட தம்பதி
சாகசத்தில் ஈடுபட்ட தம்பதி

பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்ற தம்பதியர் தங்கள் குழந்தையை வைத்து சாகசம் செய்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரோ அல்லது பைக்கில் செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தையை இருவருக்கும் நடுவில் அமர்ந்து அழைத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால், பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்ற ஒரு பெற்றோர் செய்த காரியம், பெரும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் உருவாக்கியுள்ளது.

பெங்களூரு
பெங்களூரு

பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டு போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலையாகும். இந்த பகுதியில் படுவேகமாக கணவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்கிறார். அந்த வாகனத்தின் பின்னால், அவரது மனைவி அமர்ந்துள்ளார். அவரது கையில் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் நின்றவாறு செல்கிறார். அவரது கால், ஸ்கூட்டரின் புட் ரெட்ஸ்டில் உள்ளது. பிடிமானம் இல்லாமல் நிற்கும் அந்த சிறுவனை கையில் பிடித்தவாறு செல்லும் இந்த சாகசத்தை, பின்னால் வாகனத்தில் வந்த யாரோ எடுத்து 15-ம் தேதி சமூக வலைதளத்தில்(எக்ஸ்) பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவிற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்துடன் போக்குவரத்து போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தையின் தாய் மற்றும் அவரது தந்தை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், இருவரையும் ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் செல்போன் கேம் விளையாடிக் கொண்டே ஒருவர் டூவீலரை ஓட்டிய வீடியோ வைரலானது. அந்த அதிர்ச்சி நீங்கும் முன் பெங்களூரு வீதியில் குழந்தையுடன் நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் பெற்றோர் செய்த சாகச வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in