பகீர்... பிரஜ்வல் ரேவண்ணாவின் கார் ஓட்டுநருடன் விருந்து சாப்பிட்ட காங்கிரஸ் வேட்பாளர்: வைரலாகும் புகைப்படம்!

காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல், கார்த்திக், புட்டி
காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல், கார்த்திக், புட்டி

பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திகை ஒருமுறை தான் சந்தித்ததாக ஹாசன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் படேல் கூறியிருந்த நிலையில், கார்த்திக்குடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000 பாலியல் வீடியோக்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது.

மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன், ரேவண்ணா
மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன், ரேவண்ணா

இந்த விவகாரத்தை கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவால் காதிக்கப்பட்ட பெண்கள் எஸ்ஐடியிடம் புகார் அளித்து வருகின்றனர். பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தையான முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா மீதும் பாலியல் வன்கொடுமை புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், ஹாசன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் படேல், புட்டி என்ற புட்டாராஜ் வீட்டில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு கார்த்திக்கைத் தெரியாது என்றும, அவரை ஒருமுறை தான் சந்தித்தேன் என்றும் ஸ்ரேயாஸ் படேல் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில், ஸ்ரேயாஸுடன் கார்த்திக் சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல், கார்த்திக், புட்டி
காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல், கார்த்திக், புட்டி

மக்களவைத் தேர்தல் அன்று நடந்த இந்நிகழ்ச்சியில் கார்த்திக், ஸ்ரேயாஸ் மற்றும் புட்டி கைகோர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். டி.கே.சிவகுமாருக்கு பென் டிரைவை வழங்கியவர் புட்டி என்று வழக்கறிஞரும், பாஜக தலைவருமான தேவராஜகவுடா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் விசாரணையில் எஸ்ஐடி பாரபட்சம் காட்டுவதாக எச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார். பிரஜ்வல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வழக்கறிஞர் தேவராஜகவுடாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

முன்னாள் முதல்வர் குமாரசாமி
முன்னாள் முதல்வர் குமாரசாமி

ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கை எஸ்ஐடி கண்டு கொள்ளவில்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில், கார்த்திக்குடன் காங்கிரஸ் வேட்பாளர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in