கேரளாவில் குடிபோதை பஸ் ஊழியர்களால் பயணிகளுக்கு அச்சுறுத்தல்... 74 பேர் சஸ்பெண்ட்!

கேஎஸ்ஆர்டிசி பேருந்து
கேஎஸ்ஆர்டிசி பேருந்து

கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் (கேஎஸ்ஆர்டிசி) பணிபுரியும் குடிபோதை ஊழியர்களால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் 74 நிரந்தர ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் கூறியுள்ளார்.

கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தை பயணிகளுக்கு ஏற்றதாக மாற்றம், அதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மற்றும் கேஎஸ்ஆர்டிசி மேலாண்மை இயக்குநர் பிரமோஜ் சங்கர் ஆகியோர் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக, பயணிகளே எஜமானர்கள் என்ற பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அந்த அறிவுரையின் நோக்கமாக இருந்தது.

கேஎஸ்ஆர்டிசி பேருந்து
கேஎஸ்ஆர்டிசி பேருந்து

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், " போக்குவரத்து கழகத்தை கடன் வலையில் இருந்து மீட்க வேண்டுமானால், பயணிகள் அரசு பேருந்தை நாடி வரவேண்டும். அதற்கு ஊழியர்களின் நல்ல நடத்தை மக்களின் நம்பிக்கையைப் பெறவும் உதவுகிறது. மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வேலை நேரத்தில் மது அருந்துவதைக் கடுமையாகத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக கண்காணிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் குடிபோதையில் பணிக்கு வந்த சுமார் 100 ஊழியர்கள் சிக்கியது மிகவும் வேதனையான விஷயம்.

போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார்
போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார்

போக்குவரத்து துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்ட ஆய்வை தொடர்ந்து 74 நிரந்தர ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். குடிபோதையில் 49 ஓட்டுநர்களும், 31 நடத்துநர்களும் பணிக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களும், தவறாக நடந்துகொள்ளும் நடத்துநர்களும் பயணிகளின் பாதுகாப்பிற்கும் நம்பிக்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். அதை அனுமதிக்க முடியாது.

மேலும் கேஎஸ்ஆர்டிசி மட்டுமின்றி, தனியார் பேருந்துளிலும், குடிபோதையில் பணிபுரியும் ஊழியர்கள், பயணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். தனியார் பேருந்துகளில் குடிபோதையில் ஊழியர்கள் பிடிபடும் சம்பவங்கள் ஏராளம். அத்தகைய நபர்கள் பயணிகளுடன் மோதுவதையும், பதற்றத்தை ஏற்படுத்துவதையும், விபத்துக்களை ஏற்படுத்துவதையும் தடுக்க வேண்டும். தனியார் பேருந்து ஊழியர்கள் பணிபுரியும் போது குடிபோதையில் இருந்தால் சோதனை நடத்தப்படும்.

மது
மது

மேலும், கேஎஸ்ஆர்டிசி சமீபத்தில் பணியில் மது அருந்துவதைத் தடுக்க ப்ரீதலைசர் பரிசோதனையை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. சந்தேகத்திற்கிடமான நபர்களை மட்டும் சோதனையிட்டால் மட்டும் போதாது, பணியைத் தொடங்கும் முன், பெண்களைத் தவிர மற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை சோதனை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in