டெல்லியை தொடர்ந்து மும்பையை தாக்கிய புழுதிப்புயல்... ராட்சத இரும்பு பேனர் சாய்ந்த அதிர்ச்சி வீடியோ!

இது ஹாலிவுட் படம் அல்ல... மும்பை நகரம் புழுதிப்புயலில் சிக்கிய போது எடுக்கப்பட்ட படம்
இது ஹாலிவுட் படம் அல்ல... மும்பை நகரம் புழுதிப்புயலில் சிக்கிய போது எடுக்கப்பட்ட படம்

மும்பையில் இன்று வீசிய புழுதிப்புயலின் போது, சுமார் 40 அடி உயர ராட்சத இரும்பு பேனர் சரிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக புழுதிப் புயலின் தாக்கம் காணப்படுகிறது. டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு வீசிய புழுதிப்புயலால் பகல் வேளையிலேயே இருள் சூழ்ந்தது போன்று பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதனால் கடும் அவதிக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் அதேபோன்ற புழுதிப் புயல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரையும் தாக்கி உள்ளது.

இன்று மதியம் திடீரென புழுதிப் புயல் உருவான நிலையில் நகரமே முழுமையாக இருளில் மூழ்கியது. சாலையில் சென்ற வாகனங்கள் திடீர் புழுதிப் புயல் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்ல வேண்டிய நிலை உருவானது. பல்வேறு இடங்களில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். கடும் சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் வீசியதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் மாநகரமே இருளில் மூழ்கியது.

இதனிடையே மும்பையின் வடாலா பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. அப்போது சுமார் 40 அடி உயர ராட்சத இரும்பு பேனர் ஒன்று அதனை தாக்குப் பிடிக்க முடியாமல் அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் மீது விழுந்தது. இதில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் பயணிக்க வந்திருந்த பயணிகள் காத்திருக்கும் நிலை உருவானது. புழுதிப் புயல் மற்றும் இரும்பு பேனர் கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த வீடியோக்களை பதிவிட்டு, ஹாலிவுட் திரைப்படத்தின் செட்டிங் காட்சிகள் போல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in