குறையும் தங்கம் விலை... குஷியில் நகைப்பிரியர்கள்!

தங்க நகைகள்
தங்க நகைகள்

கடந்த பத்து நாட்களில் தங்கம் விலை  சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளதால் தங்க நகைப் பிரியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் தங்கத்தை வாங்கிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள். அத்தியாவசியமாக தேவைப்படும் தங்க நகைகளை கூட விலை உயர்வு காரணமாக வாங்க முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் உள்ளனர். ஆனாலும் தங்கத்தின் விலை கடந்த பல ஆண்டுகளாக மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்த தங்கம் விலையில்  10 நாட்களில் சற்று குறைந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 47,040 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 46,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் கடந்த பத்து நாட்களில் சவரன் ஒன்றுக்கு 400 ரூபாய் விலை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 46,720 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 80 ரூபாய் குறைந்து 46,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 5,840 ரூபாயாக இருந்த நிலையில் இன்று அது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,830 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி 76.50 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை இந்த மாதத்தில் குறைந்திருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், நகைப் பிரியர்களும் தங்கம் வாங்க இதுவே சிறந்த நேரமாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in