காதலர் தினம்... 3 நாட்களுக்கு மதுபான கடைகளைத் திறக்க தடை!

காதலர் தினம்... 3 நாட்களுக்கு மதுபான கடைகளைத் திறக்க தடை!
Updated on
1 min read

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாட இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள். காதலர் தினம் நெருங்கி வருகையில், அதற்கான திட்டங்களை இப்போதில் இருந்தே உருவாக்கத் தொடங்கியுள்ளனர். காதலர் தினத்தை பெங்களூருவில் கொண்டாட திட்டமிட்டிருப்பவர்களும், பெங்களூருவாசிகளும் இந்த செய்தியைத் தெரிந்து கொள்ளுங்க. இந்த வருட காதலர் தினத்தன்று பெங்களூருவில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பிப்ரவரி 16ம் தேதியன்று சட்டமன்ற மேலவை இடைத்தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி வரை பெங்களூரில் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் மது விற்பனைக்கோ, மதுபான கடைகளைத் திறப்பதற்கோ, ஹோட்டல்களில் விற்பனை செய்வதற்கோ, பார்கள் இயங்குவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

காதலர்கள்
காதலர்கள்

இந்த தடை உத்தரவை பெங்களூரு நகர்ப்புற துணை ஆணையர் கே.ஏ.தயானந்தா பிறப்பித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 135 (சி) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலும், கர்நாடக கலால் விதிகள், 1967 இன் விதி 10 (பி)யைக் கருத்தில் கொண்டு இந்த தடை பெங்களூரு டீச்சர்ஸ் தொகுதி முழுவதுமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in