ஈரானின் ட்ரோன் தாக்குதலை இடைமறித்து வீழ்த்தியது இஸ்ரேல் அல்ல; அமெரிக்கா... வெளியான புதிய தகவல்!

ஈரான், இஸ்ரேல் விவகாரம்
ஈரான், இஸ்ரேல் விவகாரம்

கடந்த 13-ம் தேதி இஸ்ரேல் நோக்கி, ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலை இடைமறித்து அழித்தது இஸ்ரேல் அல்ல என்றும், அமெரிக்கா தான் அந்த வேலையை செய்தது என்றும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் வடமேற்கு நாடுகளான இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் அண்டை நாடுகளுடனான சச்சரவால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான், இஸ்ரேல் மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வந்தது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அன்று, இஸ்ரேலை நோக்கி ஈரான், பல நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இடைமறித்து அழிக்கப்பட்ட ராக்கெட் பூஸ்டர்
இடைமறித்து அழிக்கப்பட்ட ராக்கெட் பூஸ்டர்

ஈரானின் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் வான்வெளியில் நுழைவதற்கு முன்பாகவே இஸ்ரேல் இடை மறித்து அழித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஈரானின் ட்ரோன் தாக்குதலை இடைமறித்து அழித்தது இஸ்ரேல் அல்ல என்றும் அந்த வேலையைச் செய்தது அமெரிக்கா தான் என்றும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

ஈரான், இஸ்ரேல்
ஈரான், இஸ்ரேல்

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள், அந்நாட்டின் 'தி இன்டர்செப்ட்' என்ற செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலில், “இஸ்ரேலை அடைவதற்கு முன்பு பாதிக்கும் மேற்பட்ட ட்ரோன்கள், அமெரிக்க விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன" என தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலின் பாதிக்கும் மேற்பட்ட இடைமறிக்கும் தளவாடங்கள் செயலிழந்ததாகவும், 80-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து அழித்ததாகவும் அமெரிக்க ராணுவத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா மட்டுமின்றி ஜோர்டான், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in