பன்னுன் கொலை சதி வழக்கு: இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கும் அமெரிக்கா!

குர்பத்வந்த் சிங் பன்னுன்
குர்பத்வந்த் சிங் பன்னுன்

குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதி தொடர்பான இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எஃப்ஜே) அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார். மேலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விவகாரத்தில் இவர் பயங்கரவாதி என இந்தியாவால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாகவும், இதில் இந்திய உளவுத் துறைக்கு பங்கு இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும், இந்த சதித்திட்டத்துக்கு அப்போதைய 'ரா' (இந்திய உளவுத் துறை) அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க ஊடகம் ஒன்று குற்றம் சாட்டி செய்தி வெளியிட்டது.

அமெரிக்கா, இந்தியா
அமெரிக்கா, இந்தியா

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியா இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்பான கொலைச் சதியை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா நடத்தும் விசாரணையின் முடிவுகளுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய அரசு இந்த விஷயத்தை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவைத் அமைத்தனர். விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருப்போம்.

மேத்யூ மில்லர்
மேத்யூ மில்லர்

ஆனால் இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். அவர்களும் (இந்தியா) இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.

மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடாவில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டது குறித்து மில்லர் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், "அங்குள்ள விசாரணையின் விவரங்கள் குறித்து பேச நான் உங்களை (ஊடகம்) கனடா அதிகாரிகளிடம் பரிந்துரைக்கிறேன்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in