இஸ்ரேல் உடனான உறவைத் துண்டித்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்தது துருக்கி!

துருக்கி அதிபர் எர்டோகன்
துருக்கி அதிபர் எர்டோகன்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் வகையிலும், அங்கே போர் நிறுத்தத்துக்கு உடன்படாத இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், இஸ்ரேல் உடனான உறவை துண்டித்துக்கொள்வதாக சனிக்கிழமை அன்று துருக்கி அறிவித்தது.

இன அழிப்புக்கு இணையான போர்த் தாக்குதலை காசாவில் மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராக, மத்திய கிழக்கில் பதற்றம் தொற்றியுள்ளது. ஆபிரகாம் உடன்படிக்கை என்பதன் கீழ் இஸ்ரேலுடன் உறவைப் புதுப்பித்திருந்த அரபு நாடுகள் பலவும் அதனை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளன.

அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் ஆயிரத்துக்கும் மேலானவர்களை கொன்று குவித்து, 200க்கும் மேலானோரை கடத்திச் சென்றது. அன்று தொடங்கி ஹாமஸுக்கு எதிரான பலகட்டப் போர்த் தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.

காசா துயரம்
காசா துயரம்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலின் 1400 பேர் பலியாக, இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல் காரணமாக காசாவில் பலியானோர் எண்ணிக்கை 9,500-ஐ தாண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள். இஸ்ரேலின் இந்தப் போக்கினை கண்டிக்கும் வகையில் உலக நாடுகள் பலவும் அந்நாட்டுடனான உறவைத் துண்டிக்க முன்வந்துள்ளன.

இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்ப அழைப்பதாக ஜோர்டான், பஹ்ரைன் ஆகியவை அடுத்தடுத்து அறிவித்தன. முன்னதாக பொலிவியா தேசம் இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவுகளை துண்டித்துக்கொள்வதாக அறிவித்தது. சிலி மற்றும் கொலம்பியாவும், இஸ்ரேலுக்கான தங்கள் தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைப்பதாக தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது துருக்கியும் சேர்ந்திருக்கிறது.

உருக்குலையும் காசா
உருக்குலையும் காசா

துருக்கி அதிபர் எர்டோகன் ‘காசாவில் நிகழும் மோசமான போருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே பொறுப்பு’ என நேரடியாக குற்றம்சாட்டி உள்ளார். இஸ்ரேலுக்கான தனது தூதரை துருக்கி திரும்பப்பெற்றதை அடுத்து, இஸ்ரேலும் தனது தூதரை துருக்கியில் இருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!

நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!

என்னை பலமுறை சாகடிச்சுட்டாங்க... நடிகர் விக்ரம் பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in