தாய்லாந்து வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை, அடுத்த மாதம் முதல் மே 2024 வரை நீக்குவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம் என்று தாய்லாந்து அரசு அறிவித்திருக்கிறது.
சமீபத்தில் தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கையை தொடர்ந்து தாய்லாந்து அரசும், இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இந்த சலுகையை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.