கால்பந்து போட்டியில் வீராங்கனைக்கு முத்தம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

முத்தம் கொடுத்த லூயிஸ்
முத்தம் கொடுத்த லூயிஸ்

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது ஸ்பெயின் வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் அந்நாட்டு முன்னாள் கால்பந்து சம்மேளன தலைவா் லூயிஸ் ரூபியால்ஸுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து ஃபிஃபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசு வழங்கும் நிகழ்வின்போது மேடைக்கு வந்த ஸ்பெயின் வீராங்கனை ஜெனி ஹொ்மோசோவுக்கு, லூயிஸ் முத்தம் கொடுத்தாா்.

லூயிஸ் ரூபியால்ஸ்
லூயிஸ் ரூபியால்ஸ்

இந்த விவகாரம் சா்வதேச அளவில் இது சா்ச்சையானது. இதையடுத்து, ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி அவரை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது. மேலும், தொடர்ந்து ஃபிஃபா விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், லூயிஸ் ரூபியால்ஸுக்கு 3 ஆண்டுகளுக்கு தடை விதித்து ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக்குழு இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், தீர்ப்பு குறித்த முழுமையான விவரங்களை ஃபிஃபா இன்னும் வெளியிடவில்லை.

ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவா் பதவியிலிருந்து செப்டம்பரில் ராஜினாமா செய்த லூயிஸ் ரூபியால்ஸுக்கு எதிராக, ஸ்பெயின் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு விசாரணை நடைபெறு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in