‘இந்தியாவுக்கு எதிரான இனவெறி’ செர்பிய டென்னிஸ் வீராங்கனைக்கு வலுக்கும் கண்டனம்

டெஜானா ரடானோவிச்
டெஜானா ரடானோவிச்

இந்தியாவுக்கு எதிரான வன்மப் பதிவு வெளியிட்ட செர்பிய வீராங்கனைக்கு, இனவெறியுடன் நடந்துகொள்வதாக கண்டனங்கள் பிறந்திருக்கின்றன.

மூன்று சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு போட்டிகளின் ஒரு பகுதியாக அண்மையில் இந்தியா வந்திருந்தார் செர்பிய டென்னிஸ் வீராங்கனையான டெஜானா ரடானோவிச். அதன் பின்னர் செர்பியா திரும்பியவர், இந்தியாவைப் பற்றி இனவெறி கருத்துக்களை பதிவிட்டதாக கண்டனத்துக்கு ஆளானார்.

தன்னிலை விளக்க பதிவு
தன்னிலை விளக்க பதிவு

வளரும் நாடுகளில் இயல்பாக இருக்கக்கூடிய போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்டவற்றை பூதாகரமாக்கி அவர் தனது வன்மத்தை கக்கியதாக கண்டனங்கள் எழுந்தன. சுமார் இரு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்த ராடானோவிக் தனது பதிவில், “இனி எப்பொழுதும் இந்தியாவில் சந்திப்பதில்லை” என்று விமான நிலையத்தின் முன்பான படத்துடன் இன்ஸ்டாவில் வெளியிட்டார்.

இந்தியாவை நாகரிமற்ற தேசமாகவும், அங்கே உணவில் நெளியும் புழுக்களோடும், தலையணைகள் அழுக்கு மஞ்சளாகவும் தென்பட்டதாக அவர் அந்த பதிவில் தெரிவித்தார். அடுத்தபடியாக இந்திய நகரங்களின் போக்குவரத்து நெரிசலையும் அவர் கிண்டலடித்திருந்தார்.

அவரது வன்ம பதிவுக்கு உலகெங்கிலும் இருந்து எதிர்ப்புகள் முளைத்தன. அதனையடுத்து இன்னொரு பதிவில் விளக்கமும் தந்திருந்தார். என்னுடைய கருத்துக்கள் இந்தியாவைப் பற்றியது மட்டுமே, இந்திய மக்கள் குறித்தானது அல்ல. எனவே என்னுடைய பதிவு இனவெறி பதிவல்ல என தன்னிலை விளக்கம் தந்தார்.

டெஜானா ரடானோவிச்
டெஜானா ரடானோவிச்

அப்படியும் கண்டனங்கள் குறையாது போகவே, ”நீங்கள் எனது நாடான செர்பியாவுக்கு வந்து, இதே போன்று பிடிக்காத விஷயங்கள் குறித்து நீங்கள் பதிவிட்டால், நீங்கள் ஒரு இனவெறியர் என்றாகி விடுமா? இதற்கும் இனவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?! எனக்கு எல்லா தேசங்கள் மற்றும் நிறங்களிலும் நண்பர்கள் உள்ளனர்” என்று அடுத்த பதிவை வெளியிட்டு அமைதியாக்க முயன்றுள்ளார்.

27 வயதாகும் ராடனோவிக், தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது புனே, பெங்களூரு மற்றும் இந்தூரில் மூன்று டென்னிஸ் நிகழ்வுகளில் பங்கேற்றார். அப்போதைய தனது அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்கையில் மிகைப்படுத்திய கருத்துக்களை வெளியிட்டதில், சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in