வசமாக சிக்கிய டிரம்ப்... பாலியல் லீலைகளை நீதிமன்றத்தில் புட்டுபுட்டு வைத்த ஆபாச பட நடிகை!

ஸ்டோர்மி டேனியல்ஸ், டொனால்டு டிரம்ப்
ஸ்டோர்மி டேனியல்ஸ், டொனால்டு டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடன், உடலுறவு கொண்டதை ஆபாச பட நடிகை நியூயார்க் நீதிமன்றத்தில் புட்டுப்புட்டு வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (77). இவர், கடந்த 2006-ம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் (எ) ஸ்டோர்மி டேனியல்ஸ் (45) உடன் ஹோட்டல் ஒன்றில் உடலுறவு கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது, இதுபோன்ற தகவல் ஊடகங்களில் வெளியானால் அது தனது போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்றும், இந்த ரகசியத்தை வெளியில் தெரிவிக்காமல் இருப்பதற்கு ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் டிரம்ப் கொடுத்தார்.

ஸ்டோர்மி டேனியல்ஸ்
ஸ்டோர்மி டேனியல்ஸ்

இந்நிலையில், வழக்கறிஞருக்கு பணம் செலுத்திய ஆவண பதிவுகளை மாற்றிய குற்றச்சாட்டில் டிரம்ப் சிக்கினார். இந்நிலையில் அந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதே விவகாரம் தற்போது டிரம்ப்புக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கப் போகும் தேர்தல் களத்தில் டிரம்ப் உள்ள நிலையில் தற்போது, அவர் பணம் கொடுத்து மறைத்த விஷயம் வெளிவந்துவிட்டது.

டிரம்ப் மீதான குற்றவியல் வழக்கில் நியூயார்க் நீதிமன்றத்தில் ஸ்டோர்மி டேனியல்ஸிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியதாவது:

“கடந்த 2006ம் ஆண்டில் லேக் தஹோவில் நடந்த பிரபல கோல்ஃப் போட்டியில் டிரம்ப்பை சந்தித்தேன். அப்போது எனக்கு 27 வயது. டிரம்ப் எனது தந்தையை விடவும் மூத்தவர். இரவு உணவு சாப்பிட டிரம்ப் என்னை அழைத்தார். நான் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். எனது சம்மதத்துடன்தான் அவர் என்னை அணுகினார்.”

இவ்வாறு ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறினார்.

நீதிமன்ற விசாரணையை விவரிக்கும் வரைபடம்
நீதிமன்ற விசாரணையை விவரிக்கும் வரைபடம்

மேலும், இதன் பின்னர் டிரம்ப் தன்னை செல்லப் பெயரிட்டு அழைத்தது, ஆடைகளை களைந்தது என பாலியல் ரீதியான நிகழ்வுகளை ஸ்டோர்மி டேனியல்ஸ், மிகவும் வெளிப்படையாக கூறியது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜுவான் மெர்ச்சனை மிகவும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது.

ஆபாச பட நடிகையுடன், டிரம்ப் நடத்திய பாலியல் விளையாட்டு தற்போது அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in