திமுக அரசின் காலை உணவுத் திட்டம்... இலங்கையிலும் இன்று அமலுக்கு வந்தது!

காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருவது போல இலங்கையிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் பட்டினியுடன் வரக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டம், நாளடைவில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை வழங்கப்படும் காலை உணவு ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

காலை உணவுத்திட்டம் தொடக்கம்
காலை உணவுத்திட்டம் தொடக்கம்

இந்த நிலையில், தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் இலங்கையிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இன்று காலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாடு முழுமைக்குமான இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதன்பரி, காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை காலை உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 9134 பள்ளிகளைச் சேர்ந்த 16 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்க, கல்விகற்கும் திறனை உயர்த்த இந்த திட்டம் பயன்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக உலக உணவு திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ரூ.1,660 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in