இந்தியாவுக்கு அதிர்ச்சி... தலிபான்களுடன் கைகோக்கிறது சீனா!

இந்தியாவுக்கு அதிர்ச்சி... தலிபான்களுடன் கைகோக்கிறது சீனா!

சீனாவின் மிக பிரமாண்டமான பெல்ட் அண்ட் ரோடு உள்கட்டமைப்பு திட்டத்தில் இணைய ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் ஆர்வம் காட்டியுள்ளது. இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெக்னிக்கல் குழுவையும் சீனாவுக்கு அனுப்ப உள்ளதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் எனப்படும் பட்டுப்பாதைத் திட்டத்தின் பொருளாதார வழித்தடத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தான் ஒன்பெல்ட் ஒன் ரோடு எனப்படும் இந்த பட்டுப்பாதை திட்டத்தின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் , சீனாவின் இந்த மிக பிரமாண்டமான பெல்ட் அண்ட் ரோடு உள்கட்டமைப்பு திட்டத்தில் இணைய ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் ஆர்வம் காட்டியுள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் ஆட்சி செய்யும் தாலிபான் அரசின் பொறுப்பு வர்த்தக அமைச்சர் கூறியதாவது, "பெல்ட் அண்ட் ரோட் திட்டம் தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்களின் டெக்னிக்கல் குழுவை சீனாவுக்கு அனுப்ப இருக்கிறோம். சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டம் மற்றும் பெல்ட் அண்ட் ரோடு முன் முயற்சியில் எங்களையும் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்" என்றார். சீனாவில் நடைபெற்ற பெல்ட் அண்ட் ரோடு மாநாடு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தலிபான் அரசின் அமைச்சர் கூறினார்.

சீனா
சீனா

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தாலிபான்களின் நிர்வாகத்தை வெளிநாடுகள் எதுவும் அங்கீகரிக்காத நிலையிலும் சீனா, தாலிபான்களுடன் உறவை வலுப்படுத்த முயற்சித்தது. கடந்த மாதம் காபூலில் சீன தூதரை நியமித்தது. பிற நாடுகள் எல்லாம் துதர்களை திரும்ப பெற்ற நிலையில் சீனாதான் முதல் நாடாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆட்சி தூதரகத்தை நியமித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக அண்டை நாடுகளை கைக்குள் போட்டுக்கொண்டு சதிவலை பின்னும் சீனா, தற்போது ஆப்கானிஸ்தானையும் கைக்குள் போட்டுக்கொண்டு தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கும் நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது. சீனாவுடன் ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் கை கோர்க்க ஆர்வம் காட்டுவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ஏனெனில் ஏற்கெனவே, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக கடன்களை வழங்கி தனது பொறியில் சிக்க வைக்க முயற்சிக்கும் சீனா, தற்போது ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுடன் உறவை வளர்த்து ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடியை உரிய இடத்தில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in