அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி - ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாள் பயணம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வரும் 13ம் தேதி செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அபுதாபியில் முதல் இந்து கோயிலை அவர் திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13, 14ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இரு நாடுகள் இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பரம் ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
பிரதமர் மோடி, யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்

மேலும், அபுதாபியில் முதல் இந்து கோயிலை இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமரின் 7வது பயணமாக இது அமைய உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் பிரதமர் மோடி தனது அமீரக பயணத்தில் சந்திக்க உள்ளார். அவரது அழைப்பின் பேரில், துபாயில் நடைபெற உள்ள 'உலக அரசு உச்சி மாநாடு-2024’-ல் பிரதமர் கவுரவ விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சகம்
வெளியுறவுத் துறை அமைச்சகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே, 'சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி'-யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று கலந்துரையாடுகிறார்.

இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வலுவான அரசியல், கலாசார மற்றும் பொருளாதார தொடர்புகளால் நெருக்கமான உறவை பேணி வருகிறது. பிரதமர் மோடியின் பயணத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் எனவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in