எங்க நாட்டுக்கு வாங்க... விசா தேவையில்லை! இந்தியர்களுக்கு குட்நியூஸ் அறிவித்த அடுத்த நாடு!

வியட்நாம்
வியட்நாம்

இலங்கை, தாய்லாந்து நாடுகளைத் தொடர்ந்து  வியட்நாமும் இப்போது இந்தியர்களுக்கு விசா இல்லாத அனுமதியை வழங்கவுள்ளது.

வியட்நாம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் நுயன் வான் ஹாங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் சீனா போன்ற முக்கிய நாடுகளுக்கு விசா இல்லாத குறுகிய கால பயண அனுமதியை வழங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுவரை, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் குடிமக்கள் மட்டுமே விசா இல்லாமல் வியட்நாமுக்குள் நுழைய முடியும். இந்த விசா இல்லாத நாடுகளின் குடிமக்கள் வியட்நாமில் தங்கியிருக்கும் காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 45 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை, தாய்லாந்து ஆகிய இரு அண்டை நாடுகளும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை என அறிவித்தன. நவம்பர் 10ம் தேதி முதல், இந்தியப் பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்தது. இந்த உத்தரவாதத்துடன், இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் 30 நாட்கள் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆண்டு மே 10 வரை தாய்லாந்தில் விசா தள்ளுபடி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவை அதிகரித்தால் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் தாய்லாந்து அரசு கூறியுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுக்கான முன்னோடி திட்டமாக இலங்கையும் தொடங்கியது. இந்த நடவடிக்கை மார்ச் 31, 2024 வரை அமுலில் இருக்கும். அதாவது இந்திய பயணிகள் இந்த காலகட்டத்தில் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்லலாம். அந்த வகையில் இனி வியட்நாமுக்கும்  விசா இல்லாத பயணத்தை இந்தியர்கள் மேற்கொள்ள முடியும்.

இதையும் வாசிக்கலாமே...


தன்னை விட வயதான நடிகையை திருமணம் செய்ய விரும்பிய மாதவன்!

மேயருக்கு எதிராக தர்ணா... 3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்!

விஜயகாந்துக்கு என்னாச்சு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்டேட்!

கனமழை... உருக்குலைந்தது நீலகிரி... மீட்புப்பணிகள் தீவிரம்!

வீடியோ எடுத்து பலாத்காரம்; இளம்பெண் புகாரில் எய்ம்ஸ் மருத்துவர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in